Thursday, February 3, 2011

சுதந்திர மென்பொருள்: இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு

நீங்கள் கார் வாங்கப் போனால், கார் டீலர் “ இது சூப்பர் கார் தெரியுமா? உலகத்திலே 80 சதவீதம் பேருக்கு மேலே இந்த காரைத்தான் பயன்படுத்தறாங்க. என்ன ஒரே ஒரு பிரச்சனைன்னா மழை பெய்தால் Car top அப்பப்ப ஒழுகும். அதைப் பற்றி நீங்க கவலையேபட வேண்டாம். நாங்க இலவசமா Raincoat கொடுத்துடுவோமில்லே” என்றால் அந்த காரை நீங்கள் வாங்குவீர்களா என்ன?
புதியதாக இலவச ஆன்டிவைரஸ் புரோகிராம் (Codename Morro) (Formal name Microsoft Security Essentials) வெளியிடப் போவதாக மைக்ரோசாஃப்ட் சொல்லியிருப்பது, காசுக்கு ஆன்டிவைரஸ் புரோகிராம் விற்று பிழைக்கும் சைமாண்டெக்(Norton) போன்ற கம்பெனிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இலவச ஆன்டிவைரஸ் மட்டும் கொடுத்தா போதுமா?
Anti-Spyware,

Anti-Malware,


Anti-Rootkit,

Anti-Trojan,

Anti-Dialer,

Anti-Worm,

Anti-Adware,

Anti-Bot,

Anti-Keylogger,

Anti-Phishing இதுக்கெல்லாம் நாம எங்கே போவது?
மைக்ரோசாஃப்ட் விண்டோஸையே இலவசமா கொடுக்கிறதா பேச்சுக்கு வைச்சிக்கிட்டாலும், இந்த மேற்குறிப்பிட்ட Anti*.* இல்லாம விண்டோசை ஒழுங்கா ஓட்ட முடியுமா?

இதுங்களை வாங்கறதுக்கும், வருஷாவருஷம் அப்டேட் செய்யறதுக்கும் நாமதானே காசை எண்ணி வைக்கனும்.

தெரியாமதான் கேட்கிறேன். Anti-Virus எழுதத் தெரிந்தவர்களுக்கு, வைரஸே வராதமாதிரி Operating System கோட் செய்யத் தெரியாதா? அல்லது முடியாதா? அல்லது இஷ்டமில்லையா?

லினக்ஸ் வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஓடுதே. அது எப்படி?

விண்டோஸை இலவசமாக கொடுத்தாலும், personal and home use-க்குதான் தர வாய்ப்பு இருக்கிறது. Commercial use-க்கு காசு கொடுக்கனும்.

லினக்ஸ் personal and home use, commercial use-க்கு கூட இலவசம்தான். Linux Support contract தேவைப்பட்டா வாங்கிக் கொள்ளலாம்.

விண்டோஸ் இலவசமாக தந்தால்கூட எப்பவுமே அப்படி தருவார்கள் என்று அர்த்தம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இனிமேல் காசுக்குத்தான் என்று சொல்லிவிடலாம்.

லினக்ஸ் அப்படி இல்லை. இன்றைக்கு இலவசமா கிடைப்பது என்றைக்குமே இலவசம்தான்.

இலவசமாக கிடைக்கக் கூடிய விண்டோஸை உங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றி பயன்படுத்த வேண்டும் என்றால் முடியாது. ஏனென்றால் அது proprietory and closed source program.

லினக்ஸ் அப்படி இல்லை. லினக்ஸ் source code டவுன்லோடு செய்து உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மாற்ற நீங்கள் செய்த கோடிங்கை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

அப்படி மாற்றப்பட்ட லினக்ஸை ஒரு distribution ஆக வெளியிடும்போது மட்டுமே அந்த மாற்றப்பட்ட கோடிங்கை கட்டாயமாக கொடுக்கவேண்டும்.

ஒரு operating system எப்படி இயங்குகிறது என்பதை விண்டோஸ் source code பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றால் முடியாது. Educational purpose என்று காரணம் சொன்னால்கூட பார்க்க கொடுக்கமாட்டார்கள்.

லினக்ஸ் source code-ஐ நீங்கள் educational purpose-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏனென்றால் லினக்ஸ் ஒரு Free/Libre Open Source Software.

இதனால் கணினி பற்றிய ஆழ்ந்த அறிவு சமூகத்திற்கு கிடைக்கும். இது நல்ல விஷயம்தானே.

இந்த FOSS மென்பொருளை “கட்டற்ற மென்பொருள்” அல்லது ”திறப்பு மூல நிரலி” என்றெல்லாம் அழைத்து வந்தார்கள். இவ்வளவு சுதந்திரம் கொடுக்கும் மென்பொருளை “சுதந்திர மென்பொருள்” என்று ஏன் அழைக்கக்கூடாது?
நான் car-னு எதை சொல்றேன். Raincoat-னு எதை சொல்றேன் புரியுதா? லினக்ஸ் பயன்படுத்த Raincoat தேவையில்லை.


No comments:

Post a Comment