Thursday, February 3, 2011

உபுன்டு சிடியில் கிம்ப் சேர்ந்து வருவதில்லை. ஏன்?


உபுன்டு 9.10 (2009-ஆவது வருடம், 10-ஆம் மாதம்) வரை கிம்பை உபுன்டுவில் சேர்த்தே கொடுத்தார்கள். ஆனால் உபுன்டு 10.04 (லூசிட் லின்க்ஸ்) முதல் கிம்பை default சிடியுடன் சேர்த்து கொடுப்பதில்லை.

அதற்கு சில காரணங்களை முன்வைத்தார்கள்.

1. போட்டோஷாப் அளவிற்கு அதிக வசதிகளை உள்ளடக்கிய கிம்பை ஏன் உபுன்டு default சிடியில் சேர்த்து கொடுக்கவேண்டும்?

விண்டோசில் இருக்கும் பெயின்ட்பிரஷ் மாதிரி சாதாரணமாக இருந்தால் போதாதா? விண்டோசோடு போட்டோஷாப் சேர்த்து கொடுக்கிறார்களா என்ன? வெறும் பெயின்ட் பிரஷ்தானே சேர்த்து கொடுக்கிறார்கள்.

2. கிம்பின் user interface அவ்வளவு எளிதாக இல்லை.

3. சாதாரண பயனர்கள் அதை பயன்படுத்துவது குறைவு அல்லது
பயன்படுத்துவதே இல்லை.

4. பெரும்பாலும் போட்டோ trim/cut செய்வதற்குத்தான் கிம்ப்பை பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட சாதாரண போட்டோ வேலைகளுக்கு விண்டோஸ் பெயின்ட்பிரஷ் அளவு குறைந்த வசதிகள் உள்ள ஏதாவது ஒரு எளிய சுதந்திர மென்பொருள் போதுமே.

5. சிடியில் இடம் போதவில்லை. அந்த இடத்தில் வேறு மென்பொருள் சேர்த்துக் கொடுக்கலாம். கிம்ப் வேண்டும் என்பவர்கள் பிறகு நிறுவிக்கொள்ளலாமே.

6. கிம்ப் தொழில்முறை பயனர்களுக்குத்தான் சரி. சாதாரண பயனர்களுக்கு அது தேவையே இல்லை.

இப்படி எல்லாம் சொல்லி கிம்ப்பை சேர்ப்பதை நிறுத்தி விட்டார்கள். அதனால் நீங்கள் 10.04 அல்லது அதற்கு அடுத்து  வந்த உபுன்டு பதிப்புகளை புதிதாக நிறுவி பயன்படுத்தினால் அதில் கிம்ப் இருக்காது. நாம்தான் அதை புதிதாக சேர்க்கவேண்டும்.

நாமே கிம்ப்பை நிறுவுவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


No comments:

Post a Comment