Monday, February 21, 2011

Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!!


சமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும் எதையும் அதிகாரபூர்வமாக வழங்கவில்லை.

2010 வருட முதல் பாதியில்தான், கூகிள் டாக்ஸ் போன்ற ஆன்லைன் ஆஃபீஸ் அப்ளிகேஷன்களை மைக்ரோசாஃப்ட் அளிக்க இருக்கிறது.

Zoho. Com, கூகிள் டாக்ஸ் போன்று
Zoho CRM,
Zoho Recruit,
Zoho Invoice உட்பட நிறைய ஆன்லைன் அப்ளிகேஷன்களை உருவாக்கி தனக்கென்று ஒரு நல்ல பேர் வாங்கி இருக்கிறது.


மைக்ரோசாஃப்டின் இந்த கருத்துக்கு Zoho-வின் பதிலடி முற்றிலும் எதிர்பாராத வகையில் இருந்தது.

”ஆஹா! ஆஹா!! நாங்க Fake Office-னு மைக்ரோசாஃப்டே மெடல் கொடுத்துவிட்டது! இது எங்களுக்கு பெரிய அங்கீகாரம் தெரியுமா!” என்று Zoho CEO தன் கம்பெனி ப்ளாகில் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

மேலும் அவர் “Zoho-வை பயன்படுத்த யாரும் காசு கொடுத்து சிடியோ டிவிடியோ வாங்க வேண்டாம். பெரிய சைஸ் ஃபைல் எதுவும் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். நூற்றுக்கணக்கான டாலர்கூட கொடுக்கத் தேவையில்லை. ”

”Zoho.com போய் லாகின் செய்தாலே போதும். உடனே எல்லா அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த துவங்கிவிடலாம்.”

”அதனால்தான் மைக்ரோசாஃப்டுக்கு நாங்கள் Fake Office-ஆக தெரியுது. ”

”ஒருவர் தனது ஃபீல்டில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதாலேயே, மற்ற போட்டியாளர்களை Fake என்று சொல்வது சரியென்றால், நாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.”

”Search-ல் கூகிள் முதலிடத்தில் உள்ளது. அதனால் உங்கள் Bing-ஐ “Fake Search" என்று பெயரிட்டு அழைத்தால் சரியாக இருக்குமா?”


மைக்ரோசாஃப்ட் MS-Office-ல் 90% ஆபரேடிங் லாபம் அடிப்பதாகவும் அவர் சொல்லி இருக்கிறார்.

அத்தோடு விட்டார்களா Zoho.com?

ட்விட்டரில் இதற்கு என்று ஒரு பக்கம்
http://twitter.com/fakeoffice

FakeOffice.Org என்று ஒரு வெப்சைட்.

Fake Office - The movie என்று ஒரு இசை டாக்குமென்டரி என்று பட்டையை கிளப்பிவிட்டார்கள்.



அந்த ட்விட்டர் பக்கத்தை பார்த்தால் ”மைக்ரோசாஃப்ட் Zoho-வை Fake office என்று சொல்கிறது. அப்படி என்றால் மைக்ரோசாஃப்டின் Zune மீடியா பிளேயரை எப்படி அழைப்பது? ” என்று ஒரு ட்வீட் கேட்கிறது.

”இதுதான் Fake office-னா எனக்கு இன்னும் நிறைய வேண்டும்”- இப்படியும் ஒரு குரல்.

இந்தக் கூத்து, Zoho.com பற்றி தெரியாதவர்கள்கூட Zoho-வை பற்றி தெரிந்துகொள்ள ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது,Zoho.com CEO ஒரு தமிழர்.

பெயர் ஸ்ரீதர் வேம்பு.

ஓஹோ! Zoho என்றாலே மைக்ரோசாஃப்டுக்கு வேம்பா கசக்க இந்த பேர்கூட காரணமாக இருக்குமோ?


No comments:

Post a Comment